ஊஞ்சல் உற்சவம்pt desk
தமிழ்நாடு
கரூர் | கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் மாசிமக திருவிழா - ஊஞ்சல் உற்சவம்... பக்தர்கள் தரிசனம்
கரூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாசிமக விழாவில் சுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செய்தியாளர்: வி.பி. கண்ணன்
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் மாசிமக உற்சவம் நடைபெற்று வருகிறது. இதில், திருத்தேரோட்டம் மற்றும் தெப்பத் உற்;சவம் ஆகியவை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாசிமக திருவிழா இன்றுடன்; நிறைவடைய உள்ளது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று ஆலய மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். பட்டாச்சார்யார்கள், சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து பஞ்ச கற்பூர ஆரத்தி கும்ப ஆரத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் மனுமுருகி சாமி தரிசனம் செய்தனர்.