கரூர்: காட்டுப் பகுதியில் சடலமாக கிடந்த திமுக பெண் கவுன்சிலர் - போலீசார் விசாரணை

கரூர் அருகே காட்டுப் பகுதியில் திமுக பெண் கவுன்சிலர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை வருகின்றனர்.
DMK woman councilor
DMK woman councilorpt desk

கரூர் பாலமலை அருகே சாலையோரம் இருந்த காட்டுப் பகுதியில் பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக க.பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சடலமாக கிடந்த பெண், ஈரோடு மாவட்டம் சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா என்பது தெரியவந்தது.

dead body
dead bodypt desk

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ரூபா கரூர் பரமத்தி பகுதியில் தங்கியிருந்து கரூரில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலைக்குச் சென்ற அவர், திரும்பி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. முன்னதாக அவரது மகன் கொடுமுடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், பாலமலை அருகே ரூபா தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. ரூபா கொலை செய்யப்பட்டாரா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து க.பரமத்தி போலீசார மற்றும் கொடுமுடி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com