திமுக போராட்டத்தில் நடந்த கீழ்த்தரமான செயல்: மகளிரணி அமைப்பாளர் புகார்

திமுக போராட்டத்தில் நடந்த கீழ்த்தரமான செயல்: மகளிரணி அமைப்பாளர் புகார்

திமுக போராட்டத்தில் நடந்த கீழ்த்தரமான செயல்: மகளிரணி அமைப்பாளர் புகார்
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது தம்மிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞரணி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி ஜெயமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் திமுகவினர் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கூட்ட நெரிசலில் நகர இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் என்பவர் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, மகளிரணி துணை அமைப்பாளர் ஜெயமணி புகார் தெரிவித்துள்ளார். பின்னர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டபோது இதுதொடர்பாக நகரச் செயலாளர் கணேசனிடம் புகார் செய்ததாகவும், ஆனால், அவர் பிரபாகரை கண்டிக்கவில்லை என்றும் ஜெயமணி கூறியுள்ளார். கட்சியின் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஜெயமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தர்ணாவில் ஈடுபடுவதாக அவர் கூறினார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமூகவலைதளமான ட்விட்டரில் ‘இடுப்புக்கிள்ளிய திமுக’ என்ற ஹேஸ்டேக் இந்தியா அளவில் ட்ரண்டில் உள்ளது.இதில் ஏராளமான மீம்ஸ்கள் கேலி சித்திரங்கள் பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com