“அது என் குரல் அல்ல”-கரூர் கலெக்டர் விளக்கம்

“அது என் குரல் அல்ல”-கரூர் கலெக்டர் விளக்கம்

“அது என் குரல் அல்ல”-கரூர் கலெக்டர் விளக்கம்
Published on

ஆழ்துளைக் கிணற்றை மூட வலியுறுத்தியவரை திட்டியதாக வெளியான ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என கரூர் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திலுள்ள செம்பிய நத்தம் கிராமத்தில் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறு ஒன்றை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர்,  மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று தெரிவிக்குமாறு தெரிவித்தார்

அப்போது, அந்த இளைஞர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் மூடவில்லை என்று பதில் கூறினார். அதற்கு ஆட்சியர் மிகவும் டென்ஷனாகி ஆட்சியர் என்றால் நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் வர முடியுமா எனக் கூறியதோடு ராஸ்கல் எனவும் திட்டியதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றை மூட வலியுறுத்தியவரை திட்டியதாக வெளியான ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என கரூர் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். செம்பியநத்தம் இளைஞரிடம் தான் பேசவும் இல்லை என்றும் அது தனது குரலும் அல்ல என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புதியதலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com