தமிழ்நாடு
மூதாட்டியுடன் மண் தரையில் சாப்பாட்டை பகிர்ந்து கொண்ட கலெக்டர்
மூதாட்டியுடன் மண் தரையில் சாப்பாட்டை பகிர்ந்து கொண்ட கலெக்டர்
80 வயது மூதாட்டியுடன் மண் தரையில் அமர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் சாப்பிட்டார்.
கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தான் 80 வயது நிரம்பிய மூதாட்டி ராக்கம்மாள். பாதுகாக்க உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தனியாக சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ராக்காயின் வீட்டிற்கு திடீரென கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வந்துள்ளார். இதனை ராக்கம்மாவால் நம்பவே முடியவில்லை.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கையில் ஒரு உணவு பார்சலையும் கொண்டு வந்துள்ளார். அது அவர் வீட்டில் சமைத்த உணவு. மூதாட்டிக்கு வாழை போட்டு அவர் உணவு பரிமாறினார். அவரும் இன்னொரு வாழை இலையில் மண் தரையில் சாப்பிட்டார். ராக்கம்மா பாட்டி மகிழ்ச்சியில் மூழ்கினார். அதோடு, மூதாட்டி ராக்கம்மாவுக்கு மூதியோர் பென்ஷன் ரூ1000 வழங்கவும் அன்பழகன் உத்தரவிட்டார்.