கரூர்: பந்தயத்தில் மின்னல் வேகத்தில் பறக்கும் கார்கள்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மக்கள் அச்சம்!

ஈரோட்டில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாத பேருந்து நிலையத்தில், இளைஞர்கள் கார் பந்தயத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கார் பந்தயம்
கார் பந்தயம்புதியதலைமுறை

கரூர் செல்லும் சாலையில் ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த புறநகர் பேருந்து நிலையம் மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த இடம் வேறு பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இளைஞர்கள் சிலர் சிறுவர்களை இணைத்துக்கொண்டு அபாயகரமான முறையில் இவ்விடத்தில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். ஆகவே காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com