\
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக ட்வீட் - கரூர் பாஜக பிரமுகர் கைது

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக ட்வீட் - கரூர் பாஜக பிரமுகர் கைது

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக ட்வீட் - கரூர் பாஜக பிரமுகர் கைது
Published on

தமிழக முதல்வர் பற்றி ட்விட்டரில் தவறாக பதிவிட்டதாக பாஜக கரூர் கிழக்கு ஒன்றிய முன்னாள் இளைஞரணி பொதுச்செயலாளர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முனியப்பனூரைச் சேர்ந்த விக்னேஷ் செம்மடை சிப்காட்டில் உள்ள பிரைம் செயின் பேக்டரியில் வேலை செய்து வந்திருக்கிறார். மேலும் பாஜகவில் கரூர் கிழக்கு ஒன்றியம் முன்னாள் இளைஞரணி பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது வேலையிலிருந்து நின்றுவிட்ட இவர் பாஜகவில் உறுப்பினராக மட்டும் உள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக செய்தி பதிவிட்டதாக திமுக தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த தீபக் சூரியன் கொடுத்த புகாரின் பேரில், கரூர் முனியப்பனூரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com