\
நெல்லை வழக்கில் கருணாஸுக்கு முன் ஜாமீன்

நெல்லை வழக்கில் கருணாஸுக்கு முன் ஜாமீன்

நெல்லை வழக்கில் கருணாஸுக்கு முன் ஜாமீன்
Published on

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸுக்கு மதுரைக்கிளை முன் ஜாமீன் வழங்கியது. 

நெல்லையில் தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை சேதப்படுத்தியதாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸின் வீட்டையும் நெல்லை காவல்துறையினர் கண்காணித்தனர். இதற்கிடையில், உடல்நலக்குறைவால் கருணாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், கைது நடவடிக்கையை தவிர்க்கும் வகையில், கருணாஸ் தரப்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணைக்குப் பிறகு, கருணாஸுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com