நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சட்டமன்ற உறுப்பினர் கருணாஸின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனுடைய 302வது பிறந்தநாளையொட்டி, நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான
கருணாஸ் அங்கு மரியாதை செலுத்துவதற்காகச் சென்றிருந்தார். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திரும்பிய போது அவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் சூழ்ந்து கொண்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். லேசான தடியடி நடத்தி அங்கிருந்த
கூட்டத்தை கலைத்த போலீசார், கருணாஸை பத்திரமாக அழைத்துச் சென்றனர். தாக்குதல் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.