வேலூர் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கருணாஸிற்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ராஜா இன்று எழும்பூர் 14ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கருணாஸின் ஜாமீன் மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்ட கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.