முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் இருந்து கருணாஸ் நீக்கப்படுவதாக அதன் பொதுச்செயலாளர் பாண்டிதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிர்வாகிகளை கடந்த 24-ஆம் தேதி அவர் கூண்டோடு கலைத்தார். அந்த அமைப்பின் மாவட்ட, ஒன்றிய, நகர புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் கருணாஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படையிலிருந்து கருணாஸை நீக்கி விட்டதாக அதன் பொதுச்செயலாளர் பாண்டிதுரை அறிவித்துள்ளார். ஆனால் தன்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கருணாஸ் கூறியுள்ளார்.
2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார் கருணாஸ்.