\
கருணாஸ் கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன?

கருணாஸ் கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன?

கருணாஸ் கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன?
Published on

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கருணாஸ் கைது விவகாரத்தில் நள்ளிரவு முதல் என்ன நடந்தது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

‌நேற்று இரவு 10.30 மணிக்கு ரகசிய உத்தரவின்பேரில் வடபழனி காவல்நிலையத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 11.55 மணிக்கு சட்டமன்ற கருணாஸ் கைது செய்யப்பட உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில்‌, 12.30 மணிக்கு சென்னை சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருணாஸின் இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்கள் குவிந்தனர்.

காலை 5.15 மணிக்கு சத்தியமூர்த்தி‌ சாலை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 5.20 மணிக்கு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் தலைம‌யிலான காவல்துறையினர் கருணாஸின் வீட்டிற்குள் நுழைந்தனர். சர்ச்சைக்குரிய விதமாக பேசிய விவகாரம் தொடர்பாக அவரை கைது செய்ய இருப்பதாக 5.30 மணிக்கு கருணாஸிடம் த‌கவல் தெரிவிக்கப்பட்டது.

சரியாக 6.27 மணிக்கு கைது செய்யப்பட்டு கீழே அழைத்துவரப்பட்‌ட அவர்‌‌, 6.32 மணிக்கு செய்தியாள‌ர்களைச் சந்தித்தார். அதன்பின் 6.45 மணிக்கு நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாஸிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com