தைப்பொங்கல், தமிழர் திருநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான தைத்திங்களில் தொண்டர்களை சந்தித்து கருணாநிதி 10 ரூபாய் வழங்குவது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் அவர் நாளை சந்திக்கிறார். காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்திக்கும் அவர், அவர்களுக்கு புதிய 50 ரூபாய் நோட்டு வழங்க உள்ளார். இதனால் அவரது கோபாலபுரம் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க, தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
15 மாதங்களுக்கு பின்பு தொண்டர்களை கருணாநிதி சந்திக்க இருப்பதால் ஏராளமானோர் சந்திக்க வருவார்கள் என்று தெரிகிறது.