மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம்!

மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம்!

மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம்!
Published on

மறைந்த, திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கை நேற்றிரவு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், மெரினாவில் அவர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இதையடு த்து அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்த வேலைகள் அங்கு நடந்துகொண் டிருக்கிறது. 
இந்நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றடையும். தொண் டர்களும் பொதுமக்களும் அமைதி காத்திட வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com