சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.
திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் சரியாக காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முதல் முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, பத்திரிகையாளர் சோ, கோ.சி.மணி, சற்குண பாண்டியன் ஆகியோருக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து திமுக பொதுக் குழு கூட்டம் பெற்றது. இதில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.