\
“கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” - மருத்துவமனை அறிக்கை

“கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” - மருத்துவமனை அறிக்கை

“கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” - மருத்துவமனை அறிக்கை
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று காரணமாகவும் வயதின் காரணமாகவும் கருணாநிதி உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவ உபகரண உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com