சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சிகிச்சையின் ஒருபகுதியாக மருத்துவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை அரை மணி நேரம் சக்கர நாற்காலியில் உட்கார வைத்துள்ளனர். கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இதனை பார்த்த பல திமுக தொண்டர்களும் கடுமையாக வேதனை அடைந்தனர். இந்நிலையில் கருணாநிதி சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார் என்ற செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.