“என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்றே தெரியவில்லை”- ஜெயக்குமாருக்கு கரு.நாகராஜன் கண்டனம்

“நுனி கிளையில் அமர்ந்து, கிளையில் அடிப்பகுதியை ஜெயக்குமார் வெட்டிக் கொண்டிருக்கிறார். 19 கோடி உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தை செடியென்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்றே தெரியவில்லை”- கரு.நாகராஜன்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் தன்னுடைய ஒரு பேட்டியில் “தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்றுகூடச் சொல்வேன்” என குறிப்பிட்டிருந்தார்.

அதிமுக அரசை நேரடியாக அவர் விமர்சித்திருந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

karu.nagaraj
”இனியும் பொறுத்துக்க முடியாது” ஆவேசப்பட்ட ஜெயக்குமார்; அப்படி என்னதான் பேசினார் அண்ணாமலை- முழுவிபரம்
ஜெயக்குமார், அண்ணாமலை
ஜெயக்குமார், அண்ணாமலைPT web

அப்போது அவர், “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும், கூட்டணி தர்மத்தை மீறி பேசிகிறார். மாநில தலைமைக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக பாஜக கூட்டணி தொடரக் கூடாது என்பது போல உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தொடர கூடாது, பிரதமராக நரேந்திர மோடி வரக்கூடாது என்பது போல தான் அண்ணாமலையின் செயல்பாடுகள் உள்ளன

கத்துக்குட்டியாக இருக்கிற அண்ணாமலைக்கு வரலாறும் தெரியாது, பாரம்பரியமும் தெரியாது. அண்ணாமலையின் செயல்பாடுகள் தொடர்ந்தால் பாஜக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும். எதைப்பேசினாலும் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. கூட இருந்தே குழிபறிக்கும் செயல்களை அதிமுக வேடிக்கை பார்க்காது. அண்ணாமலையின் பேச்சால் அதிமுக தொண்டர்கள் 2 கோடி பேரும் கொந்தளித்துள்ளனர். அதிமுக ஆலமரம், பாஜக, வெறும் செடி!” என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் கரு.நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அண்ணாமலை ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியைக் கூட ஜெயக்குமார் ஒழுங்காக படிக்கவில்லை. நுனி கிளையில் அமர்ந்து கொண்டு, கிளையில் அடிப்பகுதியை ஜெயக்குமார் வெட்டிக் கொண்டிருக்கிறார். 19 கோடி உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தை செடியென்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்றே தெரியவில்லை” என கூறியுள்ளார்.

Jayakumar - Annamalai
Jayakumar - AnnamalaiPT

மேலும், “தனது மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தென் சென்னை தொகுதி பறிபோய்விடுமோ என ஜெயக்குமார் கலங்கிப் போயிருப்பார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது. இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது” எனவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com