திடீர் என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்; கார்த்தி சிதம்பரம் மனைவியின் பரப்புரையில் சலசலப்பு - நடந்ததுஎன்ன?

மானாமதுரையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி பரப்புரைக்காக புறப்பட்டபோது, தேர்தல் அதிகாரிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்திக் சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் பல்வேறு பகுதிகளிலும் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், மக்களிடம் ஆதரவு கேட்பதற்காக மானாமதுரைக்கு ஸ்ரீநிதி சென்றார். அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து அவர் பரப்புரைக்காக புறப்பட்டபோது, திடீரென வந்த தேர்தல் அதிகாரிகள், ஸ்ரீநிதிடம் பரப்புரை தொடர்பான அனுமதி கடிதத்தை கேட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com