முத்துராமலிங்க தேவருக்கு நடிகர் கார்த்திக் அஞ்சலி : ரசிகர்கள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு

முத்துராமலிங்க தேவருக்கு நடிகர் கார்த்திக் அஞ்சலி : ரசிகர்கள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு
முத்துராமலிங்க தேவருக்கு நடிகர் கார்த்திக் அஞ்சலி : ரசிகர்கள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடிகர் கார்த்திக் அஞ்சலி செலுத்த வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம் அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 112வது ஜெயந்தி விழாவும் 57வது குருபூஜை விழாவும் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், நடிகரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் பசும்பொன் நினைவிடத்தை  விட்டு கார்த்திக் வெளியே வரும்போது அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்தது. மேலும் அவருடன் செல்பி எடுக்கவும் ரசிகர்கள் முற்பட்டனர். இதனால் கார்த்திக்கின் ஆதரவாளர்களும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com