\
கார்த்திக் சிதம்பரம் பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சி போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

கார்த்திக் சிதம்பரம் பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சி போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

கார்த்திக் சிதம்பரம் பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சி போஸ்டரால் மதுரையில் பரபரப்பு
Published on

காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு எம்ஜிஆர் செங்கோல் வழங்குவது போல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களை காட்டிலும் போஸ்டர் கலாச்சாரம் மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் அவரது ஆதரவாளர்களால் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.


அதில் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு செங்கோல் வழங்குவது போல் படத்துடன் எங்கள் வாத்தியாரே என்ற வாசகத்தோடு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள நிலையில் தற்போது எம்ஜிஆர் கார்த்தி சிதம்பரத்திற்கு செங்கோல் வழங்குவது போல் உள்ள போஸ்டரால் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் பாஜக வேல் யாத்திரை விளம்பரத்தில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தியது சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது காங்கிரஸாரும் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com