பெரம்பலூர்:  பிரம்மரிஷி மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்

பெரம்பலூர்: பிரம்மரிஷி மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்

பெரம்பலூர்: பிரம்மரிஷி மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
Published on

பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆயிரணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் வருடந்தோறும் திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று மலை உச்சியில் மகாதீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று பிரம்மரிஷிமலை உச்சியில் மகா கொப்பரையில் 210 மீட்டர் நீமுள்ள கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்தே மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தவசி சுவாமிகள் ஜோதியை ஏற்றிவைத்தார். ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்திருந்து ஜோதியை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பிரம்மபுரிஸ்வரர் கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், வாலிகண்டபுரம் வாலிஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com