“நீ பேசுறது எனக்கு புரியல”- இந்தியில் கோஷமிட்டவர்களுக்கு தமிழில் கார்த்தி சிதம்பரம் பதிலடி

“நீ பேசுறது எனக்கு புரியல”- இந்தியில் கோஷமிட்டவர்களுக்கு தமிழில் கார்த்தி சிதம்பரம் பதிலடி

“நீ பேசுறது எனக்கு புரியல”- இந்தியில் கோஷமிட்டவர்களுக்கு தமிழில் கார்த்தி சிதம்பரம் பதிலடி
Published on

மக்களவையில் குடியரசு தலைவர் உரை மீது சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் பேசினார். அப்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மக்களின் பிரச்னைகள் குறித்து தெளிவாக பேசாமல் ஆளுக்கட்சியின் குரலாக உள்ளது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேல்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குறித்து தமது உரையில் குடியரசுத் தலைவர் எதுவும் பேசவில்லை என்றும் அவர் சாடினார். அதேபோல், பாப் பாடகியின் ட்விட்டருக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் நம்முடைய அரசு உண்மையான புள்ளி விவரங்களுக்கு பதில் அளிப்பதில்லை என்றும் கூறினார்.

கார்த்தி சிதம்பரம் பேசிக்கொண்டிருக்கும்போது சில எம்.பிக்கள் இந்தியில் மறுப்பு தெரிவித்து குரல் எழுப்பி வந்தனர். அப்போது ஆவேசமடைந்த கார்த்தி சிதம்பரம் “நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை” என கூலாக சொல்லிவிட்டு பேச்சை தொடர்ந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com