\
வருமான வரி வழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

வருமான வரி வழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

வருமான வரி வழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு
Published on

வருமான வரி வழக்கிலிருந்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த முட்டுக்காட்டு பகுதியில் உள்ள நிலத்தை விற்றதை கணக்கில் காட்டத்தவறியதாக கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 7.37 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கும் முன்னரே வழக்குப்பதிவு செய்தது செல்லது என தெரிவித்து கார்த்தி சிதம்பரத்தையும் அவரது மனைவியையும் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com