\
லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்ய கார்த்தி சிதம்பரம் மனு

லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்ய கார்த்தி சிதம்பரம் மனு

லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்ய கார்த்தி சிதம்பரம் மனு
Published on

லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் சிபிஐ அழைப்பாணை அனுப்பியும், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு நேரில் வராத காரணத்தால் லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டிலேயே இருப்பதாகக் கூறிய கார்த்தி சிதம்பரம் இந்தச் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் விஜய் மல்லையா போன்று கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கவே லுக் அவுட் சுற்றறிக்கை என விளக்கமளிக்கப்பட்டது. 

இந்நிலையில் லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, கார்த்தி சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com