தமிழ்நாடு
காய்ச்சல் காரணமாக எம்.பி கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சல் காரணமாக எம்.பி கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சல் காரணமாக எம்.பி. கார்த்தி சிதம்பரம் கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு கிரீம்ஸ் அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனையில், அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சில மருத்துவ பரிசோதனைகள் இன்று அவருக்கு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அவற்றை முடித்துவிட்டு, நாளை மாலை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அவர் டெல்லி புறப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.