\
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை 

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை 

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை 
Published on: 

கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரவிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர், முழு அளவுடன் நாளைக்குள் மேட்டூர் அணைக்கு வரும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆகவே காவிரியாற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com