Miracle baby
Miracle babypt desk

கர்நாடகா: 25 விரல்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தை - ஆச்சரியத்தில் குடும்பத்தினர்

கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு அவருக்கு அழகான குழந்தை இன்று பிறந்தது.

Miracle baby
Miracle babypt desk

உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கை மற்றும் கால் விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் இருந்துள்ளன. இதனால் மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இதை பார்த்து மருத்துவர்களும், குழந்தையின் குடும்பத்தினரும் ஆச்சரியமடைந்தனர்.

Miracle baby
மதுரை: அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் - கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை” என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com