உதயநிதி ஸ்டாலின், டிகே சிவக்குமார்pt web
தமிழ்நாடு
சென்னை | அமைச்சர் உதயநிதியுடனான சந்திப்பு ஏன்? - கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டி
மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் கூறுவதை நிச்சயம் மதிப்போம் என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் சென்னையில் பேட்டி அளித்தார்.
அரசுமுறை பயணமாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சென்னை வந்தார். சென்னை பசுமை வழிசாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சிவக்குமார் சந்தித்து பேசினார்.
UdhayanidhiStalin
DKShivakumar
இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி அலுவலத்திற்கு சென்ற சிவக்குமார் அங்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் உதயநிதியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது என தெரிவித்தார்.