
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழு இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிர அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று பகல் ஒரு மணி அளவில் அனைத்துக் கட்சிக் குழு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறது.