சிவகங்கை: மின் தகன மேடையில் பழுது... சடலங்களை எரியூட்ட முடியாமல் உறவினர்கள் அவதி

சிவகங்கை: மின் தகன மேடையில் பழுது... சடலங்களை எரியூட்ட முடியாமல் உறவினர்கள் அவதி

சிவகங்கை: மின் தகன மேடையில் பழுது... சடலங்களை எரியூட்ட முடியாமல் உறவினர்கள் அவதி
Published on

காரைக்குடியில் மின் தகன மேடையில் ஏற்பட்டுள்ள பழுதால் சடலங எரியூட்டுவதற்கு உறவினர்கள் அவதியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய செஞ்சை பகுதியில், நகராட்சியின் சார்பில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் தகன மேடை, கடந்த இரண்டு வாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில், இறந்தவர்களின் உடல்களை எரிக்க உறவினர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

சுமார் 3.50 இலட்சம் மக்கள் தொகை கொண்ட காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு இந்த தகனமேடை ஒன்றுதான் என்ற நிலையில், கொரோனா காலம் என்பதால், தகன மேடையை விரைந்து சீரமைக்க காரைக்குடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து காரைக்குடி நகராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, தகன மேடையை பழுது நீக்கும் பணி விரைந்து நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒருவார காலத்திற்குள் பணிகள் முடிவடையும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com