காரைக்கால்: பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து
அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்துPT

காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முன், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலக ஆவண காப்பக அறையில் திடீரென நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தொடர்ந்து தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து
கன்னியாகுமரி | கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி... வாகன சோதனையின்போது பறிமுதல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com