சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சிpt desk

கன்னியாகுமரி | மாநகராட்சி தோண்டிய பள்ளத்தில் பைக்குடன் விழுந்த இளைஞர் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிசை சரிசெய்ய தோண்டிய பள்ளம் மூடப்படாத நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பள்ளத்தில் விழுந்த பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Published on

செய்தியாளர்: நவ்பல் அஹமது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட டெரிக் -செட்டிகுளம் சாலையின் ஓரத்தில் தண்ணீர் குழாய் கசிவு காரணமாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

சிசிடிவி காட்சி
மனோஜின் இறுதி நொடிகள்.. கலங்கி வந்த பாரதிராஜா... நெஞ்சை நொறுக்கும் காட்சிகள்!

இந்த நிலையில், நேற்று இரவு அந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் உள்ளே இருசக்கர வாகனத்துடன் விழுந்துள்ளார்

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்தான பதபதைக்கம் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com