\
கன்னியாகுமரி: விஷம் அருந்திய காதல் திருமணம் செய்த தம்பதி - குழந்தை இல்லாத விரக்தி காரணமா?

கன்னியாகுமரி: விஷம் அருந்திய காதல் திருமணம் செய்த தம்பதி - குழந்தை இல்லாத விரக்தி காரணமா?

கன்னியாகுமரி: விஷம் அருந்திய காதல் திருமணம் செய்த தம்பதி - குழந்தை இல்லாத விரக்தி காரணமா?
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். உடலை கைப்பற்றிய கோட்டார் போலீசார் கணவன் மனைவி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் மகா வைகுண்டம் (27). இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி (25) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் வசித்து வந்த இவர்கள் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

நாகர்கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பொருத்தும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மகா வைகுண்டத்தின் வீடு, இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த கோட்டார் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் விஷமருந்தி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இருவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காதல் திருமணம் செய்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் மனமுடைந்த நிலையில் இருவரும் இருந்ததாகவும் இதனால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் மகா வைகுண்டத்தின் செல்போனை கைப்பற்றி அதில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் கடன் பிரச்னையா அல்லது வேறு ஏதும் பிரச்னை உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com