\
குமரி: காணாமல்போன பள்ளி மாணவன் இரு தினங்களுக்கு பின் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

குமரி: காணாமல்போன பள்ளி மாணவன் இரு தினங்களுக்கு பின் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

குமரி: காணாமல்போன பள்ளி மாணவன் இரு தினங்களுக்கு பின் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு
Published on

நாகர்கோவில் அருகே இரு தினங்களுக்கு முன்னர் மாயமான பள்ளி மாணவன் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திட்டுவிளையைச் சேர்ந்தவர் நிஜிபு. இவர் குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆதில் முகமது (12) கேரள மாநில பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் அதில் முகமது திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்கக் கோரி அவரது குடும்பத்தார் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து திட்டுவிளை அருகே உள்ள நன்றிகூறி என்னும் பகுதியில் உள்ள குளத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது ஆதில் முகமதின் சடலம் தண்ணீரில் மிதந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூதப்பாண்டி போலீசார், ஆதில் முகம்மதின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சிறுவனின் உடலில் ரத்தக் காயங்கள் இருப்பதால் அவன் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com