’’அப்பா நீங்க ஹெல்மட் இல்லாம..’’ - காவல் உதவி ஆப் அறிமுக நிகழ்ச்சியில் எஸ்.பி அறிவுரை

’’அப்பா நீங்க ஹெல்மட் இல்லாம..’’ - காவல் உதவி ஆப் அறிமுக நிகழ்ச்சியில் எஸ்.பி அறிவுரை
’’அப்பா நீங்க ஹெல்மட் இல்லாம..’’ - காவல் உதவி ஆப் அறிமுக நிகழ்ச்சியில் எஸ்.பி அறிவுரை

’’அப்பா நீங்க ஹெல்மட் இல்லாமல் வெளியே போனீங்கன்னா..படிக்க மாட்டேன்னு சொல்லணும்’’ என்று சொல்லவேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலில் நடைபெற்ற "காவல் உதவி ஆப்" அறிமுகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களையும் புகார்களையும் எளிதில் காவல் நிலையங்களில் தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் "காவல் உதவி ஆப்" என்ற ஆப்பை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகப்படுத்தி வைத்தார். இதனையடுத்து மாவட்ட வாரியாக கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த ஆப் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆப்பை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கங்களையும் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று "காவல் உதவி ஆப் கன்னியாகுமரி’’-ஐ, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் பள்ளி மைதானத்தில் "காவல் உதவி ஆப்" கன்னியாகுமரி என்ற வாசக வரிசையில் அணி வகுத்து நின்ற மாணவர் மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பேசிய காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், வாகனம் ஓட்டும்போது ஏற்படும் சாலை விபத்துக்களை தவிர்ப்பது குறித்தும் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் வீட்டிலுள்ள பெற்றோரிடமும் சாலை விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியதோடு, ’’நாளை முதல் நீங்கள், அப்பா நீங்க ஹெல்மட் அணியாமல் இல்லாமல் வெளியே போனீங்கனா... நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்! படிக்க மாட்டேன்னு!! சொல்லணும்’’ என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு "காவல் உதவி ஆப்" கன்னியாகுமரி-இன் செயல்முறை விளக்கங்களை அவரே செய்து காட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு நல்ல சேவைகளை வழங்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதில் புதிதாக டிஜிபி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது "காவல் உதவி ஆப்" எனவும், இதில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளது என்றும், இதை எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்வதே காவல்துறையின் நோக்கம் என்றும் கூறினார். மேலும் இந்த ஆப் மாணவர்கள் ஆசியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அவசர காலங்களில் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com