அழிவின் விளிம்பில் ‘இரணியல் அரண்மனை’ - கண்டுகொள்ளுமா தமிழக அரசு ?

அழிவின் விளிம்பில் ‘இரணியல் அரண்மனை’ - கண்டுகொள்ளுமா தமிழக அரசு ?

அழிவின் விளிம்பில் ‘இரணியல் அரண்மனை’ - கண்டுகொள்ளுமா தமிழக அரசு ?
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தின் கலைபொக்கிஷமான இரணியல் அரண்மனை பராமரிப்பும், பாதுகாப்பும் இன்றி சிதிலமடைந்து கிடக்கிறது. 

இரணியல் அரண்மனை என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை பகுதியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, சேரர் கால அரண்மனையான  இது ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பழமையானது என வரலாறு சொல்கிறது. அன்று தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய இடமாக இரணியல் இருந்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டு வரை வேணாட்டின் பருவகால தலைநகரமாகவும் இருந்துள்ளது. 

இந்த அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்தார். அவரது காலத்துக்கு பின் தலைநகரானது பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டது. மன்னர் ஆட்சி காலம் முடிந்ததும்  அரண்மனை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.   ஆனால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த அரண்மனையை 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் அரிசி குடோனுக்காக வழங்கியிருந்தனர்.  பல ஆண்டுகள் இந்த குடோன் இங்கு செயல்பட்டு வந்த பிறகு இங்கிருந்து மாற்றப்பட்டது. அதன் பிறகு இந்த அரண்மனையை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்தால் இந்த அரண்மனையின் ஒவ்வொரு பகுதிகளும் மெல்ல மெல்ல சேதமடைய துவங்கியது. நாளடைவில் இந்த அரண்மனை சமூக விரோதிகளின் கைவசமானது. இங்கு வரும் சமூக விரோதிகள் அரண்மனையில் பழமையான பொருட்களை திருடி சென்றனர். 

இதனால் தன் அடையாளங்களை இழந்து முற்றிலும் சேதமடைந்து புல் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக காட்சியளிக்கிறது. தற்போது இந்த அரண்மனையில் உள்ள வசந்த மண்டபத்தில் எட்டரை அடி நீளமும், நான்கரை அடி அகலமும் கொண்ட ஒரே பளிங்குக் கல்லால் ஆன படுக்கை இருக்கிறது. இது அழகிய சிற்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இது அரண்மனையின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இது மட்டும் சமூக விரோதிகளால் திருடி செல்ல முடியாத காரணத்தால் அதுமட்டும் அரண்மனையில் காணப்படுகிறது. 

இந்த அரண்மனையை பாதுகாக்க வேண்டும் என கேட்டு பல ஆண்டுகளாக போராடி வரும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களில் கோரிக்கையை ஏற்று 2014- 2015ம் ஆண்டில் அன்றைய தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டதின் கீழ் 3 கோடி 85 லட்சம் ரூபாய் ரூபாய்க்கு இந்த அரண்மனையை புனரமைக்க திட்டமிட்டமிட்டு அறிக்கப் பட்டது. 

ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுவரையிலும் இந்த அரண்மனையில் பணிகள் எதுவும் துவங்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு குமரியில் நடந்த எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பணிகள் துவங்கியதாக அறிவித்துள்ளார். ஆனால் இதுவரையிலும் பணிகள் துவங்கவில்லை என்பதுடன் இந்த அரண்மனை முற்றிலும் காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உடனடியாக இந்த அரண்மனையை புனரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

- மனு, புதிய தலைமுறை செய்தியாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com