\
குமரி: பாதி எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த ஆண் சடலம் - போலீசார் விசாரணை

குமரி: பாதி எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த ஆண் சடலம் - போலீசார் விசாரணை

குமரி: பாதி எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த ஆண் சடலம் - போலீசார் விசாரணை
Published on

சுசீந்திரம் யானைபாலம் அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் அருகே யானை பாலம் பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி, அடையாளம் தெரியாத நபரை கொலை செய்து பின்னர் சடலத்தை இப்பகுதிக்கு கொண்டு வந்து மர்ம நபர்கள் எரித்துள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரனை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com