சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி.. கன்னியாகுமரி அரசு மருத்துவமனை சாதனை..!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி.. கன்னியாகுமரி அரசு மருத்துவமனை சாதனை..!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி.. கன்னியாகுமரி அரசு மருத்துவமனை சாதனை..!
Published on

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக நோயாளி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தற்போது பூரண உடல் நலத்துடன் இருந்து வரும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 28). தொழிலாளியான இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. இதனால் அவர் கடும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் செல்வம் ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் மாற்று சிறுநீரகம் பொருத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செல்வனின் தாயார் தில்லை மணி (வயது 63) தனது ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக கொடுக்க முன் வந்தார். இதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் செல்வனின் தாயார் சிறுநீரகத்தை செல்வனுக்கு பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொண்டு வெற்றிகரமாக சிறுநீரகத்தை செல்வத்துக்கு பொருத்தினர். டாக்டர் ஜெயலால் தலைமையிலான குழு அறுவை சிகிச்சையை நடத்தியது.

இந்த அறுவை சிகிச்சை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக நடைபெற்றுள்ளது. வெற்றிகரமாக நடைபெற்று உள்ள இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து செல்வம் தற்போது பூரண உடல் நலமடைந்து வருகிறார். செல்வனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

மேலும் “ மாவட்டத்தில் உள்ள மக்கள் இது போன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனையில் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும். தற்போது இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அரசு மருத்துவமனையில் செய்யப்படுவதால் முதல்வரின் விரிவாக காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்ய முடியும். எனவே மக்கள் இது போன்ற மருத்துவ வசதிகளை அரசு மருத்துவமனையை நாடி பயன் பெற வேண்டும்” என மருத்துவ கல்லூரி முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com