\
குமரி: மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு நவ.16ம் தேதி விடுமுறை

குமரி: மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு நவ.16ம் தேதி விடுமுறை

குமரி: மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு நவ.16ம் தேதி விடுமுறை
Published on: 

கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை (நவ. 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 42 அரசு பள்ளிகளுக்கும், சாலைகள் சேதம் காரணமாகவும், தண்ணீர் தேங்கி மாணாக்கர்கள் பள்ளிக்குள் செல்ல இயலாத நிலையில் உள்ள 51 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 93 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை (16.11.2021) விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த், தெரிவித்துள்ளார்.

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com