”அந்தரங்க உறுப்புக்களின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்”-பாதிரியார் மீது பகீர் புகார்

”அந்தரங்க உறுப்புக்களின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்”-பாதிரியார் மீது பகீர் புகார்
”அந்தரங்க உறுப்புக்களின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்”-பாதிரியார் மீது பகீர் புகார்

பாதிரியார் மீது இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தலைமறைவான பாதிரியாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர், குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், பாதிரியார் பெனடிக்ட் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட்களும் சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ”பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்த சமயத்தில் நான் பிரார்த்தனைக்காக சென்றேன். அப்போது பாதிரியார் என்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததோடு, எனது உடலை மோசமாக தொட்டார்.

பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பினார். அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்” என அந்த இளம்பெண் அளித்த புகாரில் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பேச்சிப்பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றலாகி சென்ற பிறகும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் அந்த பெண் புகாரில் கூறியுள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைதளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com