\
படகு பழுதால் தவிக்கும் மீனவர்கள் : மீட்கும் முயற்சியில் கடலோரக் காவல்படை

படகு பழுதால் தவிக்கும் மீனவர்கள் : மீட்கும் முயற்சியில் கடலோரக் காவல்படை

படகு பழுதால் தவிக்கும் மீனவர்கள் : மீட்கும் முயற்சியில் கடலோரக் காவல்படை
Published on

கடல் பகுதியில் படகு பழுதானதால் கரை திரும்ப மு‌டியாமல் தவித்து வரும் மீனவர்களை மீட்கும் முயற்சியில் கடலோரக் காவல் படை ஈடுபட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த ஷிபுவுக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். முட்டம் கடல் பகுதியில் 8 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது விசைப்படகு பழுதாகியிருக்கிறது. 

விசைப்படகில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முடியாததால் கரை திரும்ப முடியாமல் தவித்த மீனவர்கள், உறவினர்களுக்கு தகவல் அளித்திருக்கின்றனர். அவர்கள் குளச்சல் கடலோரக் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தன்பேரில், மீனவர்களை மீட்கும் பணியில் கடலோரக் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com