தீயணைப்பு வீரர்கள் ராஜநாகத்தை பிடித்தனர்
தீயணைப்பு வீரர்கள் ராஜநாகத்தை பிடித்தனர்pt desk

கன்னியாகுமரி | வீட்டு வாசலில் உலாவந்த ராஜநாகம் - போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர்

மருதம்பாறை பகுதியில் குடியிருப்பு அருகே பிடிப்ட்ட ராஜநாகம். வனத்துறையினர் வராததால் ஊர்மக்கள் அதிருப்தி அடைந்தனர்:
Published on

செய்தியாளர்: மனு

குமரி மாவட்டம் களியல் அடுத்த மருதம்பாறை சந்திப்பில உள்ள ஒரு வீட்டின் வெளிபுறத்தில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நேற்று மாலை பதுங்கியிருந்த பெரிய ராஜநாகத்தை பார்த்த வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீடுகளை சேர்ந்த மக்கள் அச்சமடைந்து. உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தகவல் கொடுத்து 3 மணி நேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள், குலசேகரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வந்த குலசேகரம் தீயணைப்புத் துறையினர் ராஜநாகத்தை பத்திரமாக பிடித்துச் சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள் ராஜநாகத்தை பிடித்தனர்
திருவள்ளூர் | உங்களுக்கு அபராதம் விதிக்கலாமா?.. பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரிடம் ஆட்சியர் கரார்!

தீயணைப்பு வீரர்களின் இந்த செயல் ஊர்மக்களின் பாராட்டை பெற்றது, இதையடுத்து ஊர்மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தகவல் கொடுத்து 3 மணிநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் யாரும் வராத காரணத்தால் ஊர்மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com