கடன் தொல்லையால் தாயுடன் மகன் எடுத்த விபரீத முடிவு - கன்னியாகுமரியில் சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கடன் தொல்லையால் தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tragedy
Tragedypt desk

செய்தியாளர்: S.சுமன்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சடவிளை தெருவில் வசித்து வந்தவர் பிஜூ பிரதீப் (35) இவரது தாயார் விலாசினி (65), ஊதுபத்தி சாம்பிராணி வாசனை திரவியங்கள் தயார் செய்து மொத்தமாக விற்பனை செய்து வந்தார். இவர்களுக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

mother and son
mother and sonpt desk

இந்த நிலையில் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினருக்கு போன் செய்த பிஜூ பிரதீப், “நானும் அம்மாவும் சாகப்போகிறோம்” என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பிஜூவின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது இருவரும், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து இரணியல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com