விலையுயர்ந்த பைக்கில் வந்த நபர் அடாவடி : கோபமடைந்து அடித்த காவலர்கள்

விலையுயர்ந்த பைக்கில் வந்த நபர் அடாவடி : கோபமடைந்து அடித்த காவலர்கள்

விலையுயர்ந்த பைக்கில் வந்த நபர் அடாவடி : கோபமடைந்து அடித்த காவலர்கள்
Published on

நாகர்கோவிலில் போக்குவரத்து காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஸ்ரீநாத் என்ற இளைஞர் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள அதிநவீன இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசியபடி சென்றுள்ளார். வாகனத்தை நிறுத்தச்செய்த காவல்துறையினர், அந்த இளைஞரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதால் அவரை மடக்கிப் பிடித்தனர். 

அப்போது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்நபர், திடீரென காவல்துறையினரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் சேர்ந்து அந்த நபரை தாக்கினர். அத்துடன் அவரை கைது செய்து, 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் பிரபல துணிக்கடை உரிமையாளரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com