கன்னியாகுமரி: மதுவுக்கு அடிமையான பேரன்... பாட்டியை கொலை செய்துவிட்டு தானும் விபரீத முடிவு!

கன்னியாகுமரி அருகே மதுவுக்கு அடிமையான பேரன் பாட்டியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
suicide
suicidefile image

செய்தியாளர்: K.S.மனு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேலைகாட்டுவிளை சாரூர் பகுதியைச் சேர்ந்த தாசம்மாள் (80) என்ற மூதாட்டி தனது மகன் புஷ்பராஜ் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வந்தார்.

ends life
ends lifeகோப்புப் படம்

மகன் புஷ்பராஜ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரின் இளைய மகன் அஜித் தாசம்மாளுடன் சாரூர் பகுதியில் வசித்து வந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அஜித், மது அருந்தி வந்து தனது பாட்டியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அஜித் தனது நன்பருடன் வீட்டிற்கு வந்து பாட்டியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஊர்மக்கள் இருவரையும் துரத்தியுள்ளனர். அங்கிருந்து சென்ற அஜித் இரவு பாட்டி வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார்.

suicide
சத்தியமங்கலம்: யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு – பிரேத பரிசோதனை செய்ய விடாமல் விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், இன்று காலை வீட்டின் கதவுகள் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால், அருகில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது அஜித்தின் பாட்டி சடலமாகவும், அஜித் தற்கொலை செய்த நிலையிலும் இருப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக திருவட்டார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அஜித் தனது பாட்டியை கொலை செய்த பிறகு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com