கன்னியாகுமரி: கடன் தொல்லையால் அடகு கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி: கடன் தொல்லையால் அடகு கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரி: கடன் தொல்லையால் அடகு கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் பிரச்னையால் அடகு கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கூட்டமாவு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (35). இவரின் மூத்த மனைவி இறந்த நிலையில், உமா மகேஷ்வரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையல், ஐயப்பன் தனது வீட்டின் முன்பு உதயம் என்ற பெயரில் அடகு கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டமடைந்து கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து நேற்றிரவு வீட்டில் இருந்து மருந்துக்கோட்டை வனப்பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்லமனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லைதற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறதுஅதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றனஅவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலைஆர்.புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com