கன்னியாகுமரி: பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 12 சிறார்களின் 7 பைக்குகள் பறிமுதல் - பெற்றோருக்கு அபராதம்

குளச்சல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 12 சிறார்களின் 7-பைக்குகளை குளச்சல் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Bike Adventure
Bike Adventurefile

செய்தியாளர்: சுமன்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் - நாகர்கோவில் பிரதான சாலை மற்றும் கடற்கரை சாலைகளில் சிறார்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதோடு அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று குளச்சல் போக்குவரத்து பிரிவு போலீசார் திங்கள்நகர், குளச்சல், நாகர்கோவில் பிரதான சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Bike adventure
Bike adventurefile

அப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு வீடியோ பதிவு செய்த 12 சிறார்களை பிடித்து அவர்களிடம் இருந்த 7-பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து தலா 11,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தனர்.

Bike Adventure
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை - சாதக, பாதகங்கள் என்ன?

இந்நிலையில். செல்போன்களில் இருந்த இன்ஸ்டா ரீல்ஸ் பதிவுகளையும் பெற்றோர்கள் முன்னிலையில் அழித்து நடவடிக்கை மேற்கொண்டதோடு சிறார்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com