\
தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமி
தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமிஎக்ஸ் தளம்

கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மீது அதிமுக எடுத்த நடவடிக்கை.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!

அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார்.
Published on: 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர், தளவாய்சுந்தரம். தற்போது கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவான இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர், பாஜவினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவரது கட்சிப் பதவிகளைப் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்
அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்

அந்த வகையில், தளவாய் சுந்தரம் வகித்துவந்த அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் இந்தப் பதவி பறிப்பு குறித்து தளவாய் சுந்தரம் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள விளக்கத்தில், “என்மீது நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை. தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேரணியைத் தொடங்கி வைத்தேன். நீக்கப்பட்டுவிட்டால் ஓகே ரைட் என செல்ல வேண்டியதுதான்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுத் தகவலை அறிய கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: காதலரிடம் ஆலோசனை.. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 13 உறவினர்களை விஷம் வைத்துக் கொன்ற பாகி. சிறுமி!

தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமி
“முதல்வர் - பிரதமர் சந்திப்புக்கும் செந்தில்பாலாஜி ஜாமீனுக்கும் தொடர்பு?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com