
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் பெர்சியஸ் அலெக்சாண்டர் - மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், நான்கு பேரும் தங்களைத் தாங்களே வீட்டில் சிறைவைத்துக் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக வெளியே வரவில்லை என சமூகநலத் துறை அதிகாரிக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் சமூகநலத் துறை அதிகாரி சரோஜினி அங்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டின் கதவை அகற்றி உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு வீட்டுக்குள் தங்களை தாங்களே சிறை வைத்தபடி இருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்ஸாண்டர், அவரது மனைவி மாலதி மற்றும் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை தெரிவித்தனர். தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தங்களை மர்ம நபர்கள் கொல்ல திட்டமிட்டு வெளியில் மறைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் தாங்கள் நேரடியாக ஏசுவிடம் பேசுவதற்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீசார், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், தாங்கள் நலமாக இருப்பதாகவும் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்ததையடுத்து, போலீசார் அதனை அவர்களிடம் எழுதி வாங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.